[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

அண்ணல் காந்தியடிகளின் 147-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

leaders-pay-tribute-to-mahatma-gandhi

அண்ணல் காந்தியடிகளின் 147-ஆவது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

டெல்லி ராஜ்காட்டிலுள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலர் மாலை வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் காந்தியடிகளின் நினைவைப் போற்றும்வகையில் நினைவிடத்தில் மலர்தூவினர்.

பாரதிய ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் ஆகியோர‌ அஹிம்சையின் அடையாளமான அண்ணலுக்கு மரியாதை செலுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close