[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

பதுக்கம்மா பண்டிகை: உற்சாகமாக கொண்டாடிய தெலங்கானா மக்கள்

telangana-festival-celebrates-bathukkamma-festival

வசந்த காலம் தொடங்குவதை ஒட்டி தெலுங்கானா மக்கள் பதுக்கம்மா பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

தலைநகர் டெல்லியில் தெலங்கானா பவனில் பெண்கள் மலர்களை அடுக்கி அதைச் சுற்றி கும்மியடித்து உற்சாகமாக கொண்டாடினர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

இதேபோல் துபாயில் நடைபெற்ற பதுக்கம்மா பண்டிகையில் அங்குள்ள தெலுங்கு மக்கள் உற்சாகம் பொங்க பங்கேற்றனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதாவும் கலந்து கொண்டு கும்மி அடித்து கொண்டாடினார்.

தெலங்கானா தலைநகர் ஐதராபாதில் நடைபெற்ற பதுக்கம்மா பண்டிகையில் பல வண்ண மலர்களை அடுக்கி வைத்து இளம் பெண்கள் அதைச் சுற்றி கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

பாரத நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி! தமிழ்நாட்டில், மலைமகள், கலைமகள், அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரையும் ஒவ்வொரு தேவியருக்கும் மூன்று நாள்கள் என மொத்தம் 9 நாள்கள் கொண்டாடுகின்றனர். பத்தாம் நாள் விஜயதசமி! தமிழகத்தில் இப்படி நாம் கொண்டாடி கொண்டிருக்க, வங்கதேசத்தில் துர்க்கா பூஜை என்றும் ஒரிசாவில் வீட்டுக்கு வந்த திருமகள் என்றும் ஆடிபாடி கொண்டாடுகின்றனர்.

இப்படி பலவாறாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை தெலுங்கானா மாநிலத்தில் “பதுக்கம்மா’ என்று மிகவும் பயபக்தியுடன் மிகவும் நேர்த்தியாக கொண்டாடுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close