[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக அத்துமீறி தாக்குதல்

pakistan-violates-ceasefire-in-jammu-region

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

உரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, கடந்த புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தகர்த்தழித்தது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, பாகிஸ்தான் ராணுவம் நேற்று காஷ்மீர் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றும் 2-ஆவது நாளாக ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துடன் இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close