[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

நிறைவுக்கு வந்தது ரோசெட்டா பயணம்... விண்கலம் கடந்து வந்த பாதை

rosetta-mission-ends-in-comet-collision

அரியான் 5 ராக்கெட் மூலம் கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் ரொசேட்டா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 67பி - சுர்யுமோவ்-கேரசிமேன்கோ என்று பெயரிடப்பட்ட வால் நட்சத்திரத்தை ஆய்வு செய்வதுதான் இந்த விண்கலத்தின் நோக்கம். எகிப்தில் கண்டறியப்பட்ட 2 ஆயிரம் ஆண்டு பழமையான ரொசேட்டா கல்வெட்டின் பெயர்தான் இந்த விண்கலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. வால் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு செயற்கைக்கோள், வால்நட்சத்திரத்தில் இறங்கி ஆய்வு செய்யும் பிளே என்ற ஒரு சிறிய விண்கலம் ஆகியவை ரொசேட்டா விண்கலத்தின் அங்கங்கள்.

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களைப் போல் அல்லாமல், வால் நட்சத்திரங்கள் மிக வித்தியாசமான சுற்றுப்பாதையைக் கொண்டிருக்கும் என்பதால், அதற்குத் தக்கபடி ரொசேட்டா விண்கலத்தின் பயணம் திட்டமிடப்பட்டது. 67 பி வால்நட்சத்திரத்தைத் துரத்தியபடி செல்வதுபோல் இந்தப் பயணம் அமைந்திருக்கும்.

இதன்படி 2005-ம் ஆண்டு, ரொசேட்டா விண்கலம் பூமியை முதன் முறையாகக் கடந்து சென்றது. இதன் பிறகு 2007-ம் ஆண்டு செவ்வாய்க்கு மிக நெருக்கமாகச் சென்றது. அப்போது சூரிய ஒளி கிடைக்காத பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் பயணம் செய்து ரொசேட்டா விண்கலம் சாதனை படைத்தது. இந்தப் பயணத்தின்போது பல விண்கற்களையும் ரொசேட்டா எதிர்கொண்டது.

இதன் பிறகு சூரியமண்டலத்துக்கு வெளியேயும் வால்நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து பயணித்தது. இதனால் 2011-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, விண்கலத்தின் கணினி உள்ளிட்ட சில சாதனங்கள் தவிர மற்ற சாதனங்களும் செயல்படாத நிலையில் அணைத்து வைக்கப்பட்டன. இரண்டரை ஆண்டுகள் தூக்க நிலையிலேயே இருந்த ரொசேட்டா, 2014 ஜனவரியில் திட்டமிட்டபடி இயல்புநிலைக்குத் திரும்பி, இதற்கான தகவலை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 67பி வால் நட்சத்திரத்தை நெருங்கி அதை ஒரு வட்டப்பாதையில் சுற்றும் பணியைத் தொடங்கியது. திட்டமிட்டபடி அதே ஆண்டு நவம்பரில் ஃபிலே விண்கலம், வால்நட்சத்திரத்தில் தரையிறங்கியது. ஆனால் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காததால் சூரிய சக்தியில் இயங்கும் ஃபிலேயின் மின்கலன் முறையாக செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. சுமார் ஏழு மாதங்கள் கழித்து மீண்டும் விழித்தெழுந்த ஃபிலே கட்டுப்பாட்டு அறையோடு தகவல்களை பரிமாறியது. தற்போது இரண்டு ஆண்டு காலப் பணியை முடித்துக் கொண்டிருக்கும் ரொசேட்டா, வால்நட்சத்திரத்தில் விழுந்தது. இதோடு இதன் ஆய்வுப்பணி நிறைவுக்கு வந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close