[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு

ay-after-indias-surgical-strikes-pakistan-violates-ceasefire-in-j-ks-akhnoor-sector

காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

உரி தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, கடந்த புதன்கிழமை இரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தகர்த்தழித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

அக்னூர் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக ஜம்மு துணைக் கமிஷனர் சிம்ரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற ஐந்தாவது சண்டை நிறுத்த மீறல் இதுவாகும். மேலும் கடந்த 36 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close