[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

உரி தாக்குதலுக்கு இந்தியா பதிலடி: அரசியல் கட்சியினர் ஒருமித்த ஆதரவு

india-launches-strikes-against-militants-supports-from-political-parties

உரி தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை தகர்த்தழித்தது. ராணுவத்தின் இந்த நடவடிக்கையை நாட்டு மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரித்‌துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடு‌ருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஒரு வாரகாலமாக தீவிர கண்காணிப்பில் இருந்த ராணுவம், நேற்று முன்தினம் ‌நள்ளிரவில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக நுழைந்தது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் 3 கிலோ மீட்டர் வரையிலான பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் 7 முகாம்களை ராணுவத்தினர் தகர்த்தனர். வான்வழியாகவும், தரை வழியாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

‌இதனையடுத்து, எல்லையில் மேற்‌கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து, டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி மத்திய அரசு விளக்கம் அளித்தது‌. அதில், பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன.

ஆனால், மத்திய அரசின் கூற்றை மறுத்துள்ள பாகிஸ்தான், எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டைக் கடந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா அத்துமீறியதாகவும், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

வரும் அக்டோபர் 5-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், எந்தவித தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளார்.

எல்லையில்‌ போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதால், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, குஜராத் முதல் ஜம்மு-காஷ்மீர் வரை பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்கா, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தானை கண்டித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close