[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பஞ்சாப்பில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம்: பதிலடிக்கு காத்திருக்கும் இந்தியா

will-pakistan-hit-back-villages-close-to-border-being-evacuated-leaves-of-soldiers-cancelled

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை எதிர்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ம‌த்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அதிரடி தாக்குத‌ல் நடத்தியதில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, எல்லையோர பகுதிகளில், குறிப்பாக பஞ்சாப் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக, முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் பாதுகாப்பு குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில காவல்துறை தலைவர் சுரேஷ் அரோரா, எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்வதற்கு பாதுகாப்பு படை தயாராக ‌இருப்பதாக கூறினார்.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கையாக பஞ்சாப்பின் எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்களது கால்நடைகள் உயிரிழந்துவிட்டதாக பஞ்சாப்பின் எல்லையோர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close