[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும்: தமிழக அரசு

cauvery-issue-tn-karnataka-meeting

காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா மறுப்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய நீ்ர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் தமிழக, கர்நாடக மாநிலங்கள் இடையே கூட்டம் நடைபெறுகிறது. அதில் தமிழக தரப்பில் தலைமைச் செயலாளர், பொதுப் பணித் துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கர்நாடகா தரப்பில் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.

தமிழகத் தரப்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரையை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வாசித்தார். காவிரியில் தமிழகத்துக்கு நீர் வழங்க கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருவது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்றும் அதில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் கர்நாடகா அதை மீறுவதாகவும், பிரச்னைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, காவிரியில் நிலைமையை அறிய, குழுக்களை அனுப்ப அமைச்சர் உமாபாரதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close