[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

cauvery-water-sharing-case-today-hearing-in-supreme-court

தமிழகத்திற்கு 6 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசும் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுக்கள் காவிரி தொடர்பான பிரதான வழக்குடன் சேர்த்து இன்று விசாரணைக்கு வருகின்றன.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு கடந்த 20-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்த இயலவில்லை என்றும், தீர்ப்பில் திருத்தம் கோரியும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நீர் திறக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, தற்போது திறக்கப்பட வேண்டிய நீரை டிசம்பர் இறுதிக்குள் அளிப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் இந்த மனுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் காவிரியில் நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை என்று கூறியுள்ளது. மேலும் கர்நாடக அரசின் இடைக்கால மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

க‌டந்த 20-ஆம் தேதி காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 4 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு கர்நாடகா நீர் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. எனவே, இன்றைய வழக்கு விசாரணையின் போது இரு மாநில அரசுகளின் மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close