[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன் - உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS டிக் டாக் குறித்து திட்டவட்டமாக முடிவெடுங்கள் - உயர் நீதிமன்ற கிளைக்கு உச்சநீதிமன்றம் ஆணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்

உயிரிழந்துவிட்டதாக எண்ணி புதைக்க சென்றபோது அழுத குழந்தை

baby-cries-out-while-being-buried-in-bangladesh

வங்கதேசத்தில் பிறந்த குழந்தை, உயிரிழந்துவிட்டதாகக் கருதி புதைக்க முயன்றபோது அந்த குழந்தை அழுதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் கிரிக்கெட் வீரர் நஜ்மில் ஹுடா என்பவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்த உடன் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து குழந்தைக்கு இறுதி சடங்கு செய்ய குழந்தையின் உடலை பெட்டியில் பத்திரமாக பாதுகாத்தனர். குழந்தையை புதைக்க மறுநாள் காலை குடும்பத்தினர் இடுகாடு சென்றனர். அப்போது பெட்டியில் இருந்த குழந்தை ‘வீல்’ என அழுதது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இடுகாட்டு பொறுப்பாளர் குழந்தை சாகவில்லை. உயிருடன் உள்ளது என கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தார். உடனே குழந்தையை மேல் சிகிச்சைக்காக டாக்கா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close