[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

யூரி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: மனதோடு பேசுகிறேன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி

pm-modi-s-mann-ki-baat-highlights

ஜம்மு-காஷ்மீரின் யூரி பகுதியில் தாக்குதல் நடத்தியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் மனதோடு பேசுகிறேன் எனும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, யூரி தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசம் வீரவணக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார். மேலும், கோழைத்தனமான இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். ராணுவத்தின் மீது முழுநம்பிக்கை இருப்பதாகக் கூறிய பிரதமர், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் பிரதமர் தனது உரையில் பாரட்டு தெரிவித்தார். நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் 2.48 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, அடுத்த ஆண்டில் மேலும் 1.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close