[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மாஷலுக்கு பிடிவாரண்ட்

aircel-maxis-case-arrest-warrant-to-two-businessmen

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியாவில் உள்ள 2 தொழிலதிபர்களுக்கு பிடிவா‌ரண்ட் பிறப்பித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு ஆஜராகுமாறு இதற்கு முன் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை மலேசியாவில் உள்ள அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷலுக்கு சென்று சேர்க்க முடியா‌த நிலை இருந்ததாகவும், இந்தியாவில் இருந்து பிறப்பிக்கப்படும் நோட்டீஸ்களை மலேசியாவில் உரிய இருவரிடம் சேர்க்க முடியாத சூழல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, இந்த வழக்கு தேங்கியே இருந்ததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி சைனி, மலேசியாவில் உள்ள அனந்‌த கிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே சிபிஐ தொடர்ந்த வழக்கில், மாறன் சகோதரர்கள், காவிரி கலாநிதிமாறன் இவர்கள் மீதான விசாரணை தனியாக நடைபெறும் என்றும், வெளிநாட்டில் உள்ள அனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் மீதான விசாரணை தனியாக நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் அன்றைய தினமே விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close