[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

நிதி மோசடி வழக்கு.... சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

financial-fraud-cause-subrata-roy-s-parole-denial-by-supreme-court

நிதி மோசடி வழக்கில் சிக்கியுள்ள சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க, உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

முதலீட்டாளர்களிடம் திரட்டிய 24 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பித் தர செபி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றத் தவறியதாக, 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த சுப்ரதா ராய், கடந்த மே மாதம் அவரது தாயார் காலமானதை தொடர்ந்து, பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரதா ராயின் பரோலை நீட்டிக்க அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், சுப்ரதா ராய் பரோலை நீட்டிக்க மறுத்துவிட்டது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை சுப்ரதா ராயை நீதிமன்ற காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சுப்ரதா ராய் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close