கேரள மாநில சட்டப்பேரவை காகித பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, முழுவதும் ஆன்லைன் செயல்பாட்டிற்கு மாறப்போவதாக சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்கான முயற்சிகளை இமாச்சல பிரதேச அரசு தொடங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஆன்லைன் முறைக்கு கேரள சட்டப்பேரவை விரைவில் மாறிவிடும் என்று கூறினார். அவை உறுப்பினர்கள் 140 பேரும் தங்களது கேள்விகளை ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீராமகிருஷ்ணன், இதுதொடர்பாக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் பின்னர், உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் இருக்கைக்கு முன்னால் கணினி பொருத்தப்படும் என்றும், அதன்வழியே பேரவை அலுவல் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை...!
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு: ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் !
குல்பூஷன் ஜாதவ் வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!
புல்வாமாவில் துப்பாக்கிச் சண்டை: 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுகிறார் முரசொலி கடும் விமர்சனம்