[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ஆந்திராவில் பெய்து வரும் கனமழைக்கு 7 பேர் உயிரிழப்பு... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

heavy-rain-in-andrapradesh

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை‌ பெய்து வருவதால் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிந்து வருகின்றன.அத்துடன், பிரசாசம், கிருஷ்ணா மற்றும் கர்னூல் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களிலும் கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், ரங்காரெட்டி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய மேற்கு வங்கக்கடலின் ஆந்திர கடற்கரைப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தற்போது அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுத்துள்ளது.ஆந்திராவில் மழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close