[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

ஆஸ்கர் விருது போட்டியில் வெற்றி மாறனின் 'விசாரணை'

national-award-winning-tamil-film-visaranai-india-s-official-entry-to-the-oscars-next-year

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ‘விசாரணை’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

சர்வதே அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாடுகளும், தங்கள் நாடுகளில் வெளியான சிறந்த திரைப்படங்களை பரிந்துரை செய்கின்றன. இந்தியா சார்பில் விசாரணை, திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா இதனை முறைப்படி இன்று அறிவித்துள்ளார்.

இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய தேர்வுப் பட்டியலில் இருந்து ‘விசாரணை’ படம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

லாக்கப் என்ற நாவலை மையமாகவைத்து இயக்குனர் வெற்றிமாறன் ‘விசாரணை’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு வெளியான ‘விசாரணை’ திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த எடிட்டிங், சிறந்த உறுதுணை நடிகர் என 3 தேசிய விருதுகள் கிடைத்தது. வெனிஸில் தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது.

கடந்த 2000ம் ஆண்டில் கமல், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஹேராம்’ திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close