[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ஒருநாள் சாதாரண காய்கறி வியாபாரி...இப்போது ரூ.72 லட்சம் தங்க கடிகாரம் அணிந்த தங்க மனிதன்

once-an-ordinary-fruit-seller-goldman-kanhaiyalal-now-wears-gold-worth-rs-72-lakh-round-the-cloc

ராஜஸ்தானில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சாதாரண நபரான கன்ஹாயாலால், சித்தோர்கரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 வருடத்திற்கு பின்பு 10 டோலாஸ்களை (ஒரு டோலா என்பது 10 கிராம் தங்கமாகும்)அவரது நண்பர்கள் பரிசு அளித்தனர். அதன்பின்னர் தங்க நகைகளை எப்போதும் அணிந்து வலம் வரும் கன்ஹாயாலால், தங்கமனிதன் என்று அழைக்கப்படுகிறார்.

தற்போது 2.5 கிலோ மதிப்புள்ள தங்க கடிகாரத்தை கன்ஹாயாலால், அணிந்துள்ளார். இதன் மதிப்பு ரூ.72 லட்சமாகும். இதனால் தங்கமனிதன் என்று அழைக்கப்பட்ட அவர், இன்று கோடீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கன்ஹாயாலால் மாவட்ட பாஜக தலைவராகவும். காட்டிக் சமூகத்தின் தலைவராகவும் உள்ளார்.

75லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் அணிந்து கொண்டு, சித்தோர்கரில் பேருந்து நிலையத்தில், ஸ்டால் போட்டு காய்கறிகளை விற்று வரும் கன்ஹாயாலால், தனக்கென்று பிரத்யேகமாக பாதுகாவலர்களை வைத்துக்கொள்வதில்லையாம். எவ்வித பாதுகாப்பும் இன்றி, லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகளைஅணிந்து வலம் வரும் அவரை உள்ளூர் மக்கள் ஹீரோ என்று அழைக்கிறார்கள்.

கன்ஹாயாலால் மட்டுமின்றி அவரது மனைவியும், தங்கம் அணிவதில் அதிக ஆர்வமுடையவராம். அவர் சாதாரண நாட்களில் 3.5 கிலோ தங்கம் அணிகிறாராம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close