[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

பிரியாணி, ரூ.100-க்காக தமிழக பேருந்துகளை எரித்த பெங்களூரு பெண்மணி?

woman-arsonist-set-afire-42-buses-for-biryani-rs-100

பெங்களூருவில் தமிழக பேருந்துகளை எரித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பெண்மணி பிரியாணி மற்றும் ரூ.100-க்காக எரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், பெங்களூருவில் உள்ள கேபிஎன் தனியார் பேருந்து முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 42 பேருந்துகள் கடந்த 12ஆம் தேதி எரிக்கப்பட்டது.

இந்தவிவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக பாக்யா என்ற 22 வயது பெண் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பேருந்துகளை எரிக்க அந்த பெண்மணிக்கு பிரியாணியும், ரூ.100-ம் கொடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close