[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஜம்மு காஷ்மீரில் 3 நாட்களாக நடைபெற்ற துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது

encounter-in-poonch-ends

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே 3 நாட்களாக நடைபெற்று வந்த துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்று கிழமை பூஞ்ச் மாவட்டத்தில் கட்டட பணிகள் நடைபெற்று வரும் துணை தலைமை செயலக கட்டடத்தினுள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர்.

இதனை அடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. மூன்று நாட்களாக நீடித்த துப்பாக்கிச் சண்டையில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close