[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

காவிரி விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தல்

cauvery-row-central-government-advice-to-media

காவிரி விவகாரத்தில் ஊடகங்கள் செய்திகளை அதன் உண்மை நிலவரத்தை சரிபார்த்து வெளியிட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுரை குறிப்பில், சில தொலைகாட்சிகள் வன்முறைகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது தூண்டுதலுக்கு இடமளித்து விடும் எனவும், இதனால் பதற்றமே அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இரு மாநிலங்களிலுமே சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என தெரிவித்துள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் வன்முறைகளை நேரலையாகவோ, கோப்பு படங்களாகவோ ஒளிபரப்புவதை தவிர்த்து காவிரி நதி அல்லது பாதுகாப்பு படை போன்றவற்றை காட்டலாம் என அறிவுறுத்தியுள்ளது.

1995-ஆம் ஆண்டு கேபிள் டிவி நெட்வொர்க் கட்டுபாட்டு சட்டத்தின் விதிமுறைகளை கடைபிடித்து சூழ்நிலையை அறிந்து தொலைக்காட்சி ஊடகங்கள், கட்டுப்பாடுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close