[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 50 தனியார் பேருந்துகளுக்கு தீ வைப்பு

cauvery-water-row-40-tamil-nadu-registered-buses-burnt-in-bengaluru-38-buses-belonged-to-a-private

பெங்களூருவில் தமிழகத்தைச் சேர்ந்த 50 தனியார் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக நீர் விடுவிக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பெங்களூருவில் வன்முறை வெடித்துள்ளது.

தமிழர்கள் நடத்தும் கடைகளிலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது‌ம் கல் வீச்சு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதைக் கட்டுப்படுத்த அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறையின் உச்சகட்டமாக, 50 தனியார் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மைசூரு - பெங்களூரூ சாலையில் உள்ள நயன்த‌னஹள்ளி என்ற இடத்தில் உள்ள பேருந்து ‌பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கே.பி.என், எஸ்.ஆர்.எஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகளுக்கு, 50 பேருந்துகளுக்கு கன்னட அமைப்பினர் தீ வைத்து எரித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close