[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

குறைந்து வரும் முல்லைப் பெரியாறு நீர்மட்டம்: பாசனத்திற்கு நீர் திறப்பு குறையும் என விவசாயிகள் வேதனை

mullaperiyar-dam-water-level-decreased

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியாக குறைந்ததால் பாசனத்திற்கான நீர்திறப்பு குறைக்கப்பட வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நீர்மட்டம் குறைந்ததால் ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 511 கன அடியில் இருந்து 300 கன அடியாக குறைக்கப்பட்டது.

அணையில் 104 அடிக்கு மேல் உள்ள தண்ணீரை மட்டுமே தமிழக பாசனத்திற்கு பயன்படுத்த முடியும் என்ற சூழலில் நீர்மட்டம் 115-க்கும் கீழ் குறைந்துள்ளது. அணை தண்ணீர் திறப்பை குறைப்பது தொடர்பாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close