[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

கடற்படை தேர்வுக்கு குவிந்த பட்டதாரிகள்.. கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயம்

naval-stampede-to-selection-convex-some-graduates-injury

மும்பையில் கடற்படை ஆட்சேர்ப்பு தேர்வின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.

மலட் மாவட்டத்தில் உள்ள ஐ.என்.எஸ் ஹாம்லா கடற்படை தளத்தில் ஆட்சேர்க்கும் பணிக்கான தேர்வு நடைபெற்றது. அதற்காக ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் குவிந்திருந்தனர்.

முதலில் ‌50 சதவிகித கட்ஆப் மதிப்பெண் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டம் அதிகமானதை தொடர்ந்து 60 சதவிகித கட்ஆப் மதிப்பெண் வைத்திருப்பவர்களுக்கே தேர்வு நடைபெறும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினர் இளைஞர்களை வெளியேற்றும் போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். காவல்துறையினர் தடியடி நடத்தியதால்தான் நெரிசல் ஏற்பட்டதாக, தேர்வில் பங்கேற்க வந்தவர்கள் தெரிவித்தனர். இதை காவல்துறையினர் மறுத்தனர். இந்த சம்பவத்தால் கடற்படை தளத்தில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close