[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களில் கட்டண உயர்வு: இன்று முதல் அமல்

premium-railway-fares-hiked-up-to-50-per-cent-in-new-dynamic-pricing-model

‌ராஜதானி, சதாப்தி மற்றும் துரந்தோ ஆகிய நீண்ட தூர, அதிவேக ரயில்களில் இருக்கைகளின் கிராக்கிக்கு ஏற்ப பல அடுக்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில்களின் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் உயர்த்தியுள்ளது. ராஜதானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட அதிவேக ரயில்களின் கட்டணம் 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை டிக்கெட்டுகளின் விற்பனைக்கேற்ப உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு 10 சதவிகித டிக்கெட்டிற்கும் 10 சதவிகித அ‌ளவுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. ‌உதாரணமாக, முதல் 10 சதவிகித டிக்கெட்டிற்கு 100 ரூபாய் கட்டணம் என்றால், அடுத்த 10 சதவிகித டிக்கெட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ‌இதில் கடைசி 50 சதவிகித டிக்கெட்டுக்கு கட்டணம் ஒன்றரை மடங்காக உயரும். இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பண்டிகை காலங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களுக்கு மிகப்பெரிய இடையூறாக அமையும் என்று ரயில்வே பயணியர் சங்க இணை செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நடுத்தர வர்க்க மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் இந்தப் புதிய கட்டண முறை, முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், எக்சிகியூட்டிவ் பெட்டிகளுக்கு பொருந்தாது என்பதுடன், தட்கல் கட்டணத்திலும் மாற்றமில்லை. இத்திட்டத்தின் மூலம், 500 கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் எனக் கூறப்பட்டாலும், மக்களுக்கு என்னவோ அதிக செலவு என்கின்றனர் ரயில்பயணிகள்.

மேலும், விமான கட்டணத்துக்கு நிகரான இந்த கட்டண முறையை மத்திய ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தும் பட்சத்தில் நடுத்தட்டு பிரிவினர் மிகவும் அவதிக்குள்ளாவார்கள் என்பதே பொதுமக்களின் கவலையாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close