பஞ்சாயத்துத் தேர்தல்களில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான அரசியல் சட்டத் திருத்தம் தயாராகி வருவதாக டெல்லியில் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீரேந்திர சிங் தெரிவித்தார். பஞ்சாயத்துத் தேர்தலில் மகளிருக்கு இப்போதுள்ள 33 சதவிகித இடஒதுக்கீடு 50 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கான மசோதா, வருகிற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் வீரேந்திர சிங் தெரிவித்தார். இதற்கு அனைத்துக் கட்சிகளும் இந்த மசோதாவை ஒருமனதாக ஆதரிக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..!
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!