[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

எல்லைதாண்டி துளிர்த்த காதல்: பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் மங்கையை மணந்த ஜம்மு காவலர்

kashmiri-cop-marries-girl-from-pok-amid-unrest-in-the-valley

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை தொடர்கதையாகிவிட்ட சூழலில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணை ஜம்மு காஷ்மீர் காவலர் ஒருவர் கரம்பிடித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஓவைசிஸ் கிலானி. இவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபராபாத் நகரைச் சேர்ந்த பைஸா கிலானியைக் கரம் பிடித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் ஸ்ரீநகரில் நகரில் நடந்த திருமணத்தில் மணமகளின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டே திட்டமிடப்பட்ட இவர்களது திருமணம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. உறவினர்களான இவர்களது குடும்பம் 1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் தூரமானாலும், இந்த திருமணம் மூலம் நெருங்கி வந்துள்ளதாக மணமகளின் தந்தை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கடந்த 58 நாட்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வன்முறை சம்பவங்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close