[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆண்களே தவறாமல் இதனை செய்து வந்தால் ஒரு நாள் நீங்களும் அர்விந்த் சுவாமிதான்...

beauty

ஆண், பெண் இருவருமே சருமத்தை பராமரிப்பதிலும் தலைமுடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சருமம் மற்றும் தலைமுடியை பாதுகாப்பதற்கான பல டிப்ஸ்கள் உங்களுக்காக.

சருமத்தில் பருக்கள் நீங்கி பளபளப்பாக வைத்துக்கொள்ள :

· பாலை முகம் முழுவதும் பூசி மெதுவாக இரண்டு நிமிடம் தேய்த்து முகத்தை கழுவவேண்டும் . இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும்.

· சருமத்தை நன்றாக பாதுகாக்க தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இதனால் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து வெளியேறும். உடல் பளப்பளக்கும்.

· சருமத்துக்குக் கட்டாயமாக மாய்ச்சரைஸர் பயன்படுத்த வேண்டும். அது சருமத்துக்கு ஊட்டமளிக்கும். மேலும் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கும்.

· பழ ஜூஸ் அதிகம் குடிக்கவும். இதனால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்

· ம‌ஞ்ச‌ள் கிருமி நாசினி என்பதால் ம‌ஞ்ச‌ள் தேய்த்து குளித்து வாருங்கள் பருக்களும் அகலும். நாளடைவில் முகம் பொலிவுபெறும்.

· ஆண்களுக்கு சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.

கேசப் பராமரிப்பு:

· ஷாம்புவை தேர்ந்தெடுக்கும் போது, ஒவ்வொருவரின் தலைமுடி மற்றும் வேர்க்கால்களின் தன்மைக்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.

· அதேபோல், ஹேர் ஜெல் மற்றும் ஹேர் சீரம் பயன்படுத்துவது உங்களுடைய கூந்தலைப் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

· வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

· முடி வளர்வதற்கு கறிவேப்பிலை, செம்பருத்தி இலை , வேப்பிலை அரைத்து காயவைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்க்கவும். இதனால் தலையில் பேன் , பொடுகு நீங்கும் தலை முடி மென்மையடையும் .

· சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close