[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
  • BREAKING-NEWS மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு

உணவா? விஷமா?: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்!

know-why-reusing-oil-is-dangerous-for-your-health

உடல் ஆரோக்கியத்தில் உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 16-ம் தேதி உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. துரித உணவுகளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் இன்றைய தலைமுறை, ஊட்டச்சத்து குறைபாட்டாலும், ஆரோக்கியமற்ற உணவு முறைகளாலும் பெரிதும் பாதிக்கப்படுவது நிதர்சன உண்மை. 

இணையத்தில் சில நாட்களாக வைரலாக பகிரப்படும் ‘அருவம்’ படத்தின் காட்சியை நம்மில் பலரும் பார்த்திருப்போம் தான். டீ தூள் முதல், எண்ணெய், இறைச்சி என அனைத்திலும் கலப்படம். உணவுப்பொருட்கள் என்பதை எல்லாம் தாண்டி, எல்லாமும் முழுக்க முழுக்க வியாபாரம் என்ற நிலையில் வந்து நிற்கிறது என்பதை அந்தக்காட்சி தோலுரிக்கிறது. 

அந்தக்காட்சியில் முக்கிய கவனத்தை பெற்றது சமையல் எண்ணெய். ஒருநாள் உணவைக்கூட எண்ணெய் இல்லாமல் நம்மால் நகர்த்திவிட முடியவில்லை என்ற நிலை தான். அப்படிப்பட்ட எண்ணெய் தான் நம் உடலின் இதய ஆரோக்கியத்தோடு நேரடி தொடர்பில் இருக்கிறது. இதயம் தான் நம் உடலின் முக்கிய உறுப்பே எனும்போது எண்ணெய் கலப்படத்தை நம்மால் சாதாரணமாக கடந்து போக முடியாது. கடந்து போகவும் கூடாது.

இதய நோய்களுக்கு அதிகளவில் காரணமாக இருப்பது பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்.  உணவகங்கள், கையேந்தி கடைகள், பஜ்ஜி, வடைகள் போடப்படும் டீ கடைகள், சிக்கன் 65 போன்ற உணவுகள் தயாராகும் துரித உணவு கடைகள் என பல இடங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறித்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

“ஒருநாளைக்கு 50 லிட்டருக்கும் அதிகமான எண்ணெயை பயன்படுத்தும் ஸ்டார் ஓட்டல்கள் போன்ற பெரிய உணவகங்கள் தான் நேரடியாக புதிய எண்ணெயை வாங்குகின்றனர். பின்னர் தாங்கள் பயன்படுத்திய எண்ணெய்கள் அடுத்த தர உணவகங்களுக்கு மலிவு விலையில் கொடுக்கப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து அடுத்த தர உணவகங்களுக்கு எண்ணெய் போகிறது. இப்படி மாறி மாறி ஸ்டார் ஓட்டல் எண்ணெய் பலதரப்பட்ட பயன்பாட்டுக்கு பிறகு கையேந்தி உணவகம், சாலையோர துரித உணவகங்களில் வந்து முடிகின்றன. ஒரே எண்ணெயை பலமுறை பயன்படுத்தினால் என்ன தவறு? என்ன பிரச்னை ஏற்படும் என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

உணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிப்பதால் அதில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து ஃபிரீஃபேட்டி ஆசிட், ஆல்கஹால், சைக்லிக் காம்பவுண்ட், டைமர், பாலிமர் போன்ற உடலுக்கு தீங்கான நச்சுப்பொருட்களாகவே எண்ணெய்கள் மாறுகின்றன. இதனால் இதய நோய், கல்லீரல் நோய், அல்சைமர், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன. 

எண்ணெயின் தரத்தை ஆராய டிசிபி என்ற அளவீடு உள்ளதாகவும், அந்த சோதனையின் அடிப்படையில் எண்ணெய் தரம் பிரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தலாமா என்பதை தெரிவிக்க முடியும்” என்றும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னை போன்ற நகரங்களில் உள்ள பெரிய உணவகங்கள் அடையாளம் காணப்பட்டு உரிய விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல்கள் மூலம் எண்ணெய் கைமாறுவதை தடுக்கவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உணவு என்பது உயிர்வாழ்வதற்கான அடிப்படை என்பது மாறி, உணவே தற்போது உயிரின் அழிவுக்கு காரணமாகி வருகிறது என்பதே கசப்பான உண்மை. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் மூலம் ஊட்டச்சத்தான ஆரோக்கிய தலைமுறையை உருவாக்க வேண்டுமென்பதே தற்போதைய தேவையாகவும் உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close