[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

குடிக்க தண்ணீர் இல்லை.. சாக விடுங்கள் - பிரதமருக்கு கடிதம்

contaminated-water-forces-up-family-to-seek-pm-modi-s-nod-to-end-life

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்தவர் சத்ரபால் சிங். தனது 3 குழந்தைகளோடு வசித்து வரும் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “அடிப்படை தேவையான தண்ணீர் இல்லாமல் நாங்கள் கஷ்டப்படுகிறோம், இந்நிலையில் வாழ்வது கடினமாக உள்ளது. எனது குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி கொடுங்கள் என எழுதியுள்ளார். 

கடிதத்தோடு சேர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சத்ரபால் சிங் “சுதந்திரம் அடைந்த்து 72 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் குடிக்க சரியான நீர் இல்லை. குழந்தைகளோடு சேர்த்து அனைவரும் உப்பு தண்ணீரை குடிக்கிறோம். கொஞ்சம் உப்பாக இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் குடிக்கவே முடியாத நிலையில் இருக்கிறது, அடிப்படை தேவைகளை கூட அரசு செய்துதராதா என கேள்வி எழுப்பியுள்ளார். 

சத்ரபால் சிங் சில நாட்களுக்கு முன்பு உள்ளூர் நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் “தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர நிர்வாகத்தாலும் அரசாலும் முடியவில்லை, எனவே என்னை நானே ஏலம் விட்டு அந்த தொகையில் குடிநீர் வசதி ஏற்படுத்தி எனது கிராமத்துக்கு கொடுக்கிறேன்” என கூறியிருந்தார். ஆனால அந்த போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close