[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

நிலக்கரி பயன்பாட்டால் இந்தியாவில் அதிகம் வெளியேறும் கரியமில வாயு

india-s-carbon-dioxide-emissions-up-5

கடந்த ஆண்டில் இந்தியாவில் வெளியான கார்பன் - டை ஆக்ஸைட் எரிவாயுவின் அளவு 5% அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

‘இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி’ என்ற அமைப்பு உலகநாடுகளில் வெளியேறும் கார்பன்- டை ஆக்ஸைட் அளவு குறித்து  ஆய்வு நடத்தியது. அதன்படி 2018ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் வெளியேறிய கார்பன்- டை ஆக்ஸைட் அளவு, 5% அதிகமாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் 2299 மில்லியன் டன் அளவு கார்பன்- டை ஆக்ஸைட் வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் சீனா வெளியேறியுள்ள கார்பன்- டை ஆக்ஸைட் அளவைவிட அதிகம். இதற்கு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலக்கரி பயன்பாடே காரணம் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியா 2015 பாரீஸ் பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் 2030ஆம் ஆண்டிற்குள் 40% எரிசக்தியை மாசு ஏற்படுத்தாத முறைகள் மூலம் உற்பத்தி செய்ய போவதாக தெரிவித்திருந்தது. அதன்படி சூரிய சக்தி போன்றவற்றில் முதலீடு செய்து வந்தது. ஆனால் கடந்தாண்டு இந்தியா நிலக்கரி அல்லாத முறையில் எரிசக்தி தயாரிப்பதில் 3% குறைந்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. 

மேலும் உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்படுத்துவது அமெரிக்காவில் தான் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இது 10% உயர்ந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close