[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை

சர்வசாதாரணமாக கிடைக்கிறதா பிளாஸ்டிக் பைகள் ? என்னானது தடை?

three-months-on-tamilnadu-s-plastic-ban-in-tatters

பிளாஸ்டிக் தடை உத்தரவிட்டு கிட்டத்தட்ட 3 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் பிளாஸ்டிக் பைகள் சர்வசாதாரணமாக கிடைப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கடந்த ஜூன் 5-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. 

இதனை அடுத்து சிறிய பெட்டி கடைகள் முதல் ஹோட்டல்கள் என எல்லா கடைகளிலும் ''இனி பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு இல்லை. வரும் போதே துணிப்பையை கொண்டுவரவும் என எழுதி ஒட்டினார்கள்'' . சுற்றுப்புறத்துக்கும், சுகாதாரத்துக்கும் நல்லது தானே என அனைவருமே தமிழக அரசின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தனர். கையேந்தி உணவகங்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் முதல் பிளாஸ்டிக் மாறி வாழை இலைகள் வந்தன. ஆனால் எத்தனை நாளைக்கு என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

பிளாஸ்டிக் தடை உத்தரவிட்டு கிட்டத்தட்ட 3 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தடை விதித்து உத்தரவு போட்டார்களா? என்று கேட்கும் அளவுக்கு தற்போது பிளாஸ்டிக் பைகள் சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. தள்ளு வண்டி கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன.

இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கருத்து தெரிவித்த வியபாரி ஒருவர், பிளாஸ்டிக் பைகள் தடை விதித்த நேரத்தில் எங்குமே பைகள் கிடைக்கவில்லை. கையிருப்பு பைகளை பயன்படுத்தினோம். தற்போது வழக்கம் போல் பிளாஸ்டிக் பைகள் கிடைக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஜவஹர்லால் சண்முகம், சட்டம் சில மாதங்களிலேயே நீர்த்துவிடுகிறது. மக்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக பிளாஸ்டிக் பை தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு உரிய எச்சரிக்கை கொடுக்க வேண்டும். கடுமையான அபராதம் வசூலிக்க வேண்டும். இல்லையென்றால் பிளாஸ்டிக் தடை பயன்படாது என்று தெரிவித்துள்ளார்.

விதிகளை அரசு அமல்படுத்திவிட்டு அமைதியாக இருந்துவிடாமல், தொடர் சோதனைகள், அபராதம் என கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் ஒரு விதியை அரசால் மட்டுமே வெற்றியடையச் செய்ய முடியாது, அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுமே சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close