[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது குண்டு வெடித்தது
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்; வெடி குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகிய மண்டபம், மூலச்சல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன் - உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS டிக் டாக் குறித்து திட்டவட்டமாக முடிவெடுங்கள் - உயர் நீதிமன்ற கிளைக்கு உச்சநீதிமன்றம் ஆணை

எண்ணெய் குளியலில் இவ்வளவு நன்மைகளா? நம் வீட்டுக்குள்ளே ஒரு மருத்துவம்!

benefits-of-weekly-oil-bath

''உடல் சூட்டை குறைப்பது மட்டுமில்லாமல் ஹார்மோன்ஸ் சுரப்பதற்கும் எண்ணெய் குளியல் பெரிய அளவில் உதவியாக இருக்கின்றது''

காற்றின் ஈரப்பதம் குறைந்துள்ளதால் குமரி முதல் வட கர்நாடகம் வரை உள்ள பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. அதன்படியே வெயில் தன்னுடைய உக்கிரத்தை காட்டி வருகிறது. மார்ச் மாதத்திலேயே கத்தரி வெயிலை போல வெப்பம் நிலவுகிறது. கிராமங்கள் நகரங்கள் என பாகுபாடின்றி அனைவரையும் வெயில் வாட்டி வதைக்கிறது. ஆங்காங்கே பழச்சாறு கடைகள் முளைத்திருக்கின்றன. பொதுமக்களும் சூட்டை தணிக்க என்னென்னவோ செய்து வருகிறார்கள். இந்த நேரத்தில் நாம் முக்கிய கடைபிடிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. அது 'எண்ணெய் குளியல்'.

ஆத்திச்ச்சூடியில் அவ்வையார் கூறியுள்ள 'சனி நீராடு' என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் ''சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்'' என்பதே பொதுவான பொருளாக கொள்ளப்படுகிறது. தற்போது தீபாவளிக்கு மட்டுமே எண்ணெய் குளியல் என்று சுருங்கிவிட்டது. ஆனால் எண்ணெய் குளியல் என்பது மிகவும் முக்கியமான மருத்துவ முறை என்று இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் சாதாரணமாக தண்ணீர் ஊற்றி குளிப்பது போல எண்ணெய் குளியல் என்பது சாதாரண குளியல் இல்லை என்றும், அது ஒரு மருத்துவம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி மருத்துவமாக பார்க்கப்படும் எண்ணெய் குளியலில் என்னதான் இருக்கிறது. பார்ப்போம்.

பொதுவாக உடல் கோளாறுகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது 'உடல் சூடு'. அப்படிபட்ட உடல் சூட்டுக்கு எதிரியாக இருக்கிறது எண்ணெய் குளியல். உடல் சூட்டை குறைப்பது மட்டுமில்லாமல் ஹார்மோன்ஸ் சுரப்பதற்கும் எண்ணெய் குளியல் பெரிய அளவில் உதவியாக இருக்கின்றது. உடல் ஆரோக்யத்துக்கான ஹார்மோன்ஸ் சுரப்பதால் நம் மனநிலை புத்துணர்ச்சியாக இருக்கிறது. 

தூக்கத்துக்கான ஹார்மோன்ஸ் சுரப்பதால் இரவில் நன்றாக தூக்கம் வருகிறது. நல்ல தூக்கம் காரணமாக மன அழுத்தம் குறைகிறது. ரத்த சோகை வராமல் தடுத்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எண்ணெய் குளியல் உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாயில் ஏற்படும் பிரச்னைக்கு எண்ணெய் குளியல் தீர்வாக அமைகிறது. எண்ணெய் குளியலன்று அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகள், அதீத குளிர்ச்சியான உணவுகளை எடுக்காமல் எளிதில் செறிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் நல்லது. ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளையும் தவிர்ப்பது நல்லது எனவும் இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரத்துக்கு இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளித்தால் நல்லது என்றும் குறைந்தது ஒரு நாளாவது எண்ணெய் குளியல் அவசியம் என்றும்இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கால நிலை, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எண்ணெய் குளியலை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இயற்கை மருத்துவர்களை அணுகி தெளிவு பெறலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close