[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

பெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’ 

jackal-fox-is-found-in-periyar-tiger-reserve-forest-in-kerala

தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அரிய வகை ‘குள்ள நரி’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைகளைக் கொண்டது. புலிகள் தொடங்கி சிறுத்தை, யானை, கரும்புலி, செந்நாய், மிளா வகை மான், காட்டெருமை, நரி, பன்றி என 35க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பாலூட்டிகள் இனங்கள் இங்கு உள்ளன. தேக்கடி பெரியார் புலிகள் காப்பகமாக 1982ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த வனப்பகுதிக்குள் தற்போது முதன்முறையாக ‘குள்ள நரி’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி 9ம் தேதி, முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் பகுதிக்கும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் தேக்கடி மதகு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த ‘குள்ள நரி’ இருப்பதை பெரியார் புலிகள் காப்பக சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர் முனைவர் பாட்ரிக் டேவிட் பார்த்துள்ளார். உடனே புலிகள் காப்பக இயற்கை கல்வியாளர் ராஜ்குமார் அதனை படமாக்கியுள்ளார். அந்தப் படத்தைக்கொண்டு, அது ‘குள்ள நரி’ என்பதும், அது கானிஸ் ஆரியஸ் என்ற வகையைச் சேர்ந்தது என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தக் குள்ள நரிகள், கடந்த 1990ம் ஆண்டு முதல் தற்போது  வரை தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் நடந்த விலங்கினங்கள் கணக்கெடுப்புகள் எதிலும் பதிவாகவில்லை என்பது ஒப்புநோக்கலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்தக் குள்ள நரியின் படங்களை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனர் ஷில்பா வி.குமார் நேற்று வெளியிட்டுள்ளார்.  வழக்கமாக இரவில் மட்டுமே கூட்டமாக வெளிவரும் தன்மை கொண்டது இந்தக் குள்ள நரிகள். பகல் நேரத்தில் தனியாக வந்தது எப்படி என்பது குறித்து, கண்காணிப்பிற்கும் ஆய்விற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதி தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், தமிழக வனப்பகுதிக்குளிருந்து தனது கூட்டங்களிலிருந்து வழி தவறி வந்திருக்கலாம். அல்லது இரை தேடி வந்திருக்கலாம் என வன இணை இயக்குநர் ஷில்பா வி குமார் தெரிவித்துள்ளார். மேலும் குள்ளநரிக்கான புகைப்படங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close