[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது - சென்னை ராயபுரத்தில் முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS வேட்பு மனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்

கருக்கலைப்பு செய்ய அவதியுரும் பெண்கள்: ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்

half-of-all-pregnancies-in-india-unintended-lancet-study

திட்டமிடப்படாத கருத்தரிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு குறித்து லேன்செட் குலோபல் ஹெல்த் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

மருத்துவர்களின் ஆலோசனையின்றி பெண்கள் எடுத்துக் கொண்ட மருந்துகளால் இந்தியாவில் 2015 ஆம் ஆண்டு மட்டும் தோராயமாக 15.6 மில்லியன் கருச்சிதைகள் நடந்துள்ளன. 50 சதவீத கருத்தரிப்புகள் எதிர்பாராத விதமாகவே நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. திட்டமிடப்படாத கருத்தரிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு குறித்து லேன்செட் குலோபல் ஹெல்த் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 1000-ல் 47 பேருக்கு கருச்சிதை ஏற்படுகிறது. இந்த எண்ணிக்கை தெற்கு ஆசிய நாட்டு பெண்களுக்கு ஏற்படும் கருச்சிதைவு எண்ணிக்கைக்கு இணையாக உள்ளது.

அரசின் பொது சுகாதார மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்ய போதுமான வசதிகள் இல்லாததால், கருக்கலைப்பு செய்ய இந்தியப் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்று நியூயார்க்கின் குட்மாசர் நிறுவன துணைத் தலைவர் மருத்துவர் சுசீலா சிங் கூறுகிறார். இந்தியாவில் 81 சதவீத கருக்கலைப்புகள், மாத்திரைகள் மூலமே நடப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 19 சதவீத கருக்கலைப்புகளில் 14 சதவீத கருக்கலைப்புகள் அறுவைசிகிச்சை மூலம் நடைபெறுகின்றன. மீதமுள்ள 5 சதவீத கருக்கலைப்புகள், மருத்துவமனையில் அல்லாமல், பாதுகாப்பற்ற வேறு முறைகளில் செய்யப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

2015 ஆம் ஆண்டின் கணக்குப்படி 48.1 மில்லியன் கருத்தரிப்புகளில், பாதிக்கு மேல் எதிர்பாராத விதமாக நிகழ்ந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது கருத்தரிக்கவே கூடாது அல்லது குறிப்பிட்ட நேரத்தில் கருத்தரிக்க வேண்டாம் என்று நினைத்த பெண்கள் கருத்தரித்ததாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் 15 முதல் 49 வயதுடைய 1000 பெண்களில் 70 பேர் எதிர்பாராத விதமாக கருத்தரித்துள்ளனர். இந்த எண்ணிக்கை, வங்கதேசம், நேபாள், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட நெருக்கமாக உள்ளது.

இந்தியாவில் 1971 ஆம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை கருக்கலைப்பு குறித்த சரியான எண்ணிக்கையை எடுக்க முடியவில்லை என்று மும்பை உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவன பேராசிரியர் டாக்டர் சந்திர சேகர் கூறுகிறார். மேலும், இந்தியாவில் நான்கில் ஒரு கருக்கலைப்பு மட்டுமே மருத்துவமனைகளில் நடப்பாதகவும் கூறுகிறார்.

இந்தியாவின் கிராமப்புற ஏழை பெண்களுக்கு அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் மருத்துவம் பார்க்கும் ஒரே இடம். அரசு சுகாதார நிலையங்களில் 25 சதவீத மையங்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்கின்றன. மீதமுள்ள மையங்களில் அந்த வசதிகள் இல்லாத சூழலே நிலவுகிறது. நான்கில் மூன்று கருக்கலைப்புகள் மாத்திரைகள் மூலம் நடப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மருத்துவ முறையில் கருக்கலைப்பு செய்வது பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறிகின்றனர். 

கருத்தரித்து 9 வாரங்கள் வரை மருத்துவ முறையில் கருக்கலைப்பு செய்யலாம். அதாவது, மருத்துவமனையிலோ அல்லது மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகள் மூலம் கருக்கலைப்பு செய்யலாம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. முறையான கருக்கலைப்பு மையங்களை அதிகமாக நிறுவுவதன் மூலமும், மருத்துவர்களுக்கு கருக்கலைப்பு குறித்து முறையான பயிற்சிகள் அளித்து, அதிகப்படியான கருக்கலைப்பு மருத்துவர்களை உருவாக்குதன் மூலம் கருக்கலைப்பு செய்வதில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close