[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சமூகநீதியை தடுக்கவே நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
 • BREAKING-NEWS அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை: அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
 • BREAKING-NEWS ’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!
 • BREAKING-NEWS தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் இருக்கும்: செங்கோட்டையன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசுவிடுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS விவேகம் படம் வெளியான நிலையில் அஜித் மற்றும் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
 • BREAKING-NEWS ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?
 • BREAKING-NEWS ஜீவசமாதிக்காக 7வது நாளாக நளினி கணவர் முருகன் உண்ணாவிரதமும், மவுன விரதமும் மேற்கொண்டுள்ளார்
 • BREAKING-NEWS ரிசார்ட்டில் உள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி செல்கிறார்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,309 கன அடியில் இருந்து 3,534 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனோகரன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
 • BREAKING-NEWS மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்
சுற்றுச்சூழல் / சுகாதாரம் 03 Aug, 2017 09:59 PM

மாரடைப்பு அறிகுறிகளைக் கவனியுங்கள்... அபாயத்தைத் தவிர்த்திடுங்கள்

symptoms-of-heart-attack

உலகில் பெரும்பாலான மனிதர்களின் மரணத்திற்கு காரணம் மாரடைப்புதான். மாரடைப்பு திடீரென்று ஏற்பட்டு திடீர் மரணத்தை ஏற்படுத்துவதாகத்தான் நம்மில்பெ ரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மாரடைப்பு வருவதை முன்கூட்டியே அறியலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு மாதத்திற்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தோன்றிவிடும் என்கிறார்கள். பின்வரும் அந்த அறிகுறிகள் தெரிந்த உடன் மருத்துவரை அணுகுவது அவசியம்:

அதிகப்படியான சோர்வு

நீங்கள் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருக்கும்போதும் கூட உடல் முழுக்க சோர்வாக காணப்படுகிறதா? ஒரு நீண்ட நேர நல்ல தூக்கத்திற்கு பின்பும் உடல் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்களா? களைப்பாகவும் மறுபடியும் தூங்க வேண்டும் என்ற எண்ணமும் வருகிறதா? இது மாரடைப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம்.

தூக்கப் பிரச்னை

நீங்கள் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது உங்களாலே உங்கள் தூக்கம் தடைபடுகிறது என்றால் உடனடியாக மருத்துரை அணுகுங்கள். உங்களுக்கு தேவையே இல்லாத நேரத்தில் கூட தூக்கத்தில் எழும்பி அடிக்கடி பாத்ரூம் செல்கிறீர்கள். இல்லையென்றால் பசி எடுப்பபது போல் உணர்கிறீர்கள் என்றால் சற்று கவனமுடன் இருங்கள்.

சுவாச பிரச்னை

உங்களால் எந்தவித சிரமும் இன்றி மூச்சு விட முடிகிறதா? ஆம் என்றால் உங்களுக்கு பிரச்னை இல்லை. அதுவே மூச்சுவிடவே கஷ்டமாக உணர்ந்தால் மருத்துவரை உடனே சென்று பாருங்கள்.

மார்பில் வலி

உங்கள் மார்பில் அடிக்கடி வலி ஏற்பட்டால் அது மாரடைப்பிற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். அதுமட்டுமின்றி நெஞ்சு எரிவது போல் அடிக்கடி தோன்றினாலும், பிரச்னை சிறியது என்று நினைக்காமல் மருத்துவரை பாருங்கள். அஜீரணக் கோளாறு இருந்தாலும் லேசாக விட்டுவிடாதீர்கள்.

பலவீனம்

உங்களின் இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் உங்களின் முதுகெலும்புகளில் வலி ஏற்படும். அப்போது உங்களின் இதயம், முதுகெலும்பு, கைகளோடு தொடர்புடைய நரம்புகள் பாதிப்படையும். இதனால் உங்கள் உடல் பலவீனம் அடையும். இது மாரடைப்புக்கு இட்டுச் செல்லலாம். எச்சரிக்கையாக இருங்கள்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close