[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தர்மயுத்தம் பற்றி பேச ஓபிஎஸ்க்கு அருகதை இல்லை: தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ
 • BREAKING-NEWS நீட் தேர்வில் ஓராண்டு விலக்களிக்கும் தமிழக அரசின் அவசரசட்டத்துக்கு இன்று ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை அழிக்க நினைக்கிறீர்களா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 • BREAKING-NEWS போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை: தீபக்
 • BREAKING-NEWS வேதா நிலையத்தை நினைவிடமாக்கும் முன் சட்டப்படி எங்களது கருத்தை கேட்க வேண்டும்: முதல்வருக்கு தீபக் கடிதம்
 • BREAKING-NEWS ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை
 • BREAKING-NEWS மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.77 அடியில் இருந்து 50.83 கன அடியாக உயர்வு
 • BREAKING-NEWS கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
 • BREAKING-NEWS பிரபல நடிகர் அல்வா வாசு காலமானார்!
 • BREAKING-NEWS நீலகிரி: கூடலூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
 • BREAKING-NEWS காஞ்சிபுரம் ஸ்ரீநிவாசா அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு அறையில் தீ விபத்து
 • BREAKING-NEWS தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 186 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது
 • BREAKING-NEWS செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 86 மில்லியன் கனஅடியில் இருந்து 101 மில்லியன் கன அடியாக உயர்வு
 • BREAKING-NEWS சசிகலாவுக்கு இன்று பிறந்தநாள்: பெங்களூர் சென்றார் தினகரன்
முக்கியச் செய்திகள் 13 Jan, 2016 03:51 PM

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம்: கருணாநிதி

dmk-leader-karunanidhi-demand-central-government-to-take-action-to-conduct-jallikattu

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்தாமல், ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்க வசதியாக ஒரு புதிய பிரிவை இயற்றாமல் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது தவறு எனக்கூறியிருக்கிறார். அதனால் தான் அந்த அறிவிக்கைக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உடன்படவில்லை என கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நீதிமன்றத் தீர்ப்பை, அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரப்படி மத்திய அரசோ அல்லது மாநில அரசோ மாற்றி அமைக்க முடியும் என உச்சநீதிமன்றமே கூறியிருப்பதாக அவர் நினைவுகூர்ந்திருக்கிறார்.

இதுதவிர, விளையாட்டு பொழுதுபோக்கு போன்றவை, மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை பிறப்பிக்குமாறு ஆளுநரிடம் கேட்பதே போதுமானது என்றும் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருப்பதையும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே, இப்பிரச்னையில் பிரதமர் மோடி உடனடி நடவடிக்கை எடுத்து அவசரச்சட்டம் இயற்றி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த உதவிடுமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close