[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

வருமானவரி உங்களுக்கு தெரியும், அதென்ன 'கொழுப்பு வரி'?

fat-tax

கேரளாவில் பர்கர்கள், பீட்சாக்கள், டோனட்ஸ், சாண்ட்விட்ச்கள் மற்றும் பாஸ்தா ஆகியவற்றுக்கு 14.5% ‘கொழுப்பு வரி’ விதிக்கப்பட்டுள்ளது.

அது என்ன கொழுப்பு வரி? ஆரோக்கியமற்ற ‘ஜங் புஃட்’ எனப்படும் பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால், உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இந்த கேடு விளைவிக்கும் துரித உணவு வகைகள் மீது விதிக்கப்படும் வரியே கொழுப்பு வரி. அதாவது உடலிலுள்ள கொழுப்பை குறைக்க உருவான வரி... என்றே கூறலாம். இது சாச்சு ரேட்டட் ஃபேட் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்தியாவுக்கு கொழுப்பு வரி புதிது என்றாலும், டென்மார்க், ஹங்கேரி போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மக்களிடம் ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை வாங்கி உண்ணும் பழக்கம் குறைவதற்காகவும், நாட்டின் நிதி பற்றாக்குறைக்குமே இந்த ஏற்பாடு.

இது கேரள மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ளது. உள்நாட்டு உணவு பொருட்களுக்கு இவ்வரி கிடையாது. வெளிநாட்டு உணவுகளான ‘ஜங் புஃட்’ வகைகளுக்கு மட்டுமே.சிகரெட் வரி விதிப்பு போல தான் ‘கொழுப்புவரி’ இவ்வகை உணவு பொருட்கள் தீங்கு விளைவிப்பவை அதை மக்களுக்கு உணர்த்தவே இந்த வரி விதிக்கப்படுகிறது.

கேரளாவைத் தொடர்ந்து தற்போது குஜராத்திலும் பீட்சா, பர்கர் உள்ளிட்ட உணவுகளுக்கு 14.5% கொழுப்பு வரி விதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இவ்வரி உயர்த்த வாய்ப்பில்லை காரணம் இங்கு வாட் வரியே 14.5% ஆகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close