[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ரூ.15 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு

psbs-strike-may-affect-transactions-worth-rs-15-000-crore-assocham

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணவர்த்தக பரிமாற்றத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தால் பல மாநிலங்களிலும் வங்கிப்பணிகள் முற்றிலும் முடங்கின. தமிழகத்திலும் வேலைநிறுத்தத்தின் தாக்கம் இருந்தது.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், அகில வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம் பங்கேற்றார். அப்போது, வங்கிகள் தனியார்மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழுக்கங்களை எழுப்பினர். மதுரை மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதே போல், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில், தனியார் மற்றும் அந்நிய முதலீட்டிற்கு ஆதராக மாற்றங்கள் செய்யப்பட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார். திருச்சி மாவட்டத்தில் 260 வங்கிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வடசேரியில் வங்கு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close