[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

வீண் விமர்சனங்களைப் பொருட்படுத்துவதில்லை: விமர்சிப்பவர்கள் மீது ரகுராம் ராஜன் தாக்கு

show-me-how-inflation-is-low-raghuram-rajan-on-dialogues-by-critics

வளர்ச்சிக்கு எதிராக தான் இருந்ததாக குற்றஞ்சாட்டுபவர்கள் பணவீக்கம் எப்படி குறைந்தது என்று விளக்குவார்களா என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்ற வீண் விமர்சனங்களை தான் பொருட்படுத்துவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்த போதும் அது குறித்து தேவையற்ற சந்தேகங்கள் எழுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ரகுராம் ராஜன் தேசத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாகவும் அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த மாதம் கூறியிருந்தார். இந்நிலையில் ராஜனின் கருத்து வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close