மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டும் கடந்த நிதியாண்டில் நஷ்டம் அடைந்ததாக தெரிவித்துள்ளன.
2018-19 ஆம் நிதியாண்டில், அமேசான் இந்தியா நிறுவனத்திற்கு 5 ஆயிரத்து 685 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதற்கு முந்தைய நிதியாண்டில் ஏற்பட்ட இழப்பை விட கடந்த நிதியாண்டில் 9.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மற்றொரு பெரிய ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டும் கடந்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 836 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் அறிவித்திருந்த விழாக்கால சலுகையில் இதுவரை இல்லாத அளவிற்கு விற்பனை அதிகரித்ததாக அவ்விரு நிறுவனங்களும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்