[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

மல்லையா செப். 9ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

vijay-mallya-asked-to-appear-in-delhi-court-in-september

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையா வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க‌ப்பட்டுள்ளது. ‌

இதுதொடர்பான வழக்கு டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இதற்கான உத்தரவை மாஜிஸ்திரேட் சுமித் தாஸ் பிறப்பித்தார். இவ்வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து கடந்த 2000 வது ஆ‌ண்டு பிறப்பிக்கப்பட்ட ‌உத்தரவு ரத்து செய்யப்‌படுவதாகவும் ‌சுமித் தாஸ் தெரிவித்தார்.

முன்னதாக 1996, 1997 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களின்போது கிங்ஃபிஷர் நிறுவனத்தின் சின்னத்தை பயன்படுத்த பிரிட்டன் நிறுவனம் ஒன்றிற்கு மல்லையா 2 லட்சம் அமெரிக்க டாலர்களை கொடுத்ததாக புகார் எழுந்தது.

ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி இந்தத் தொகையை மல்லையா செலுத்தியதாக அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து கடந்த 2000 வது ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close