[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

குறிப்பிட்‌ட கார் மாடல்களின் விலையை குறைத்தது மாருதி சுசுகி 

maruti-suzuki-cuts-car-prices-days-after-govt-slashes-corporate-tax

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, குறிப்பிட்‌ட கார் மாடல்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த கார்ப்ரேட் வரி என்றழைக்கப்படும் வருமானவரி 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்தார். இதன் எதிரொலியாக பல பொருட்களில் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள மாருதி சுசுகி நிறுவனம்,  தனது தயாரிப்புகளில் குறிப்பிட்‌ட கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பெருநிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்ததைத் தொடர்ந்து அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

குறிப்பாக, MARUTI ALTO 800, ALTO K10, SWIFT DIESEL, CELERIO, BALENO DIESEL உள்ளிட்ட மாடல் கார்களின் ஷோரூம் விலை 5 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close