[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஒரு வாரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ.1,048 குறைவு

gold-rate-decreased

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.29,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்த நிலையில் சமீபத்தில் அதன் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 4-ஆம் தேதி காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.30,120/க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை அதிகரிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கவலையுறச் செய்தது. ஆனால் அதன்பின் தங்கத்தின் விலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.29,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,048 குறைந்துள்ளது. இதனால் இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை குறையுமா என்ற எதிர்பார்பில் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close