[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

சற்று குறைந்தது தங்க விலை : சரவனுக்கு ரூ.192 குறைவு

gold-rate-decreased-rs-192-per-pawn-in-chennai

சென்னையில் தங்க விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது.

நேற்று முன்தின நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 11 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 729 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 29 ஆயிரத்து 832 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 29,744-க்கு விற்பனையான நிலையில், மாலையில் 29,832-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை தங்க விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120 ஆக விற்பனை செய்யப்பட்டது. ரூ.30 உயர்ந்து ரூ.3,765 ரூபாய்க்கு விற்பனையானது. இது வரலாறு காணாத உயர்வாக பார்க்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.60 உயர்ந்து, ரூ.55.20க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.29,928 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றிற்கு ரூ.24 குறைந்து ரூ.3,741 ஆக உள்ளது. வெள்ளியை பொறுத்தவரையில் ஒரு கிராம் 54.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.54,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close