[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

வருமான வரி விகிதங்களில் விரைவில் மாற்றம்?

new-income-tax-slabs-here-are-5-rates-proposed-to-govt-says-report

நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி செலுத்தும் விகிதங்களை மாற்றுவதற்கான பரிந்துரை அரசுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

நேரடி வருமான வரி விகிதங்களை மாற்றுவது தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு, பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவிகிதமும், பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விகித அமைப்பு மூலம் தற்போது 5, 20, 30 ஆகிய மூன்று சதவிகிதங்களில் நேரடி வருமான வரி விகிக்கப்படுகிறது.

ஆனால் இந்த நடைமுறையை 5 வித வரி கட்டமைப்பு கொண்டதாக மாற்ற அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவிகிதத்திற்கு பதில் 10 சதவிகிதம் வரி விதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுபோல பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவிகிதத்திற்கு பதில் 20 சதவிகிதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய பரிந்துரைகளின்படி வருமான வரி விகிதங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டால் மத்திய அரசுக்கு வரி வருவாயில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close