[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை அவதிக்குள்ளாக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் எண்ணம் - கபில் சிபல்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

''டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர உள்ளோம்'' :எஸ்பிஐ-ன் அடுத்த திட்டம்!

sbi-aims-to-eliminate-debit-cards-to-boost-digital-payment-solutions

டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்து டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க போவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

பண பரிவர்த்தனைக்காக பலரது கையிலும் இருப்பது டெபிட் கார்டுகள். ஏடிஎம் இயந்திரம் மூலம் டெபிட் கார்டு உதவியுடன் தேவைப்படும் நேரத்தில் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி டெபிட் கார்டுகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் குமார் டெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்றும், அதனை நிச்சயம் செய்து முடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்தியாவில் 90 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. அதேபோல் 3 கோடி கிரெடிட் கார்டுகள் உள்ளன. தற்போது எஸ்பிஐ யோனோ மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது. அதேபோல் டிஜிட்டல் முறைகளை ஊக்குவித்து டெபிட் கார்டுகளை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே 68ஆயிரம் யோனோ கேஷ் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் மையங்கள் நிறுவப்படும். 

யோனோ கேஷ் மையங்கள் மூலம் பண பரிவர்த்தனை எளிதாகும். இதன் மூலம் டெபிட் கார்டுகளின் பயன்பாடு பெருமளவில் குறையும். மேலும் இது கிரெடிட் கார்ட் மாதிரியான சேவைகளை வழங்கும் என தெரிவித்துள்ளார். QR கோடு முறையில் பரிவர்த்தனை என்பதும் மிகவும் எளிதான ஒன்று என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close