[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

28 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் ஆபரணத் தங்கம்..!

gold-price-increased

தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 314 ரூபாய் விலை‌ அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையில் உயர்வு காணப்பட்டது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 13 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 473 ரூபாய்க்கும், ஒரு சவரன் 104 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 27 ஆயிரத்து 784 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 45 ரூபாய் 70 காசுக்கு விற்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

சீனா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் டாலரை விற்று தங்கத்தை வாங்கி குவித்து வருவதும் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் சார்ந்த அச்சங்களும் தங்கத்தின் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே பொருளாதா நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close