[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 320 ரூபாய் விலை குறைந்தது

gold-price-decreased

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 320 ரூபாய் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 40 ரூபாய் விலை குறைந்து 3,212 ரூபாய்க்கும், ஒரு சவரன் 320 ரூபாய் விலை இறங்கி 25,696 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சென்ற ஜூன் 25-ஆம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் 26, 464 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், அன்றுமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் காணப்படுகிறது. தங்கத்தின் விலை ஓரளவிற்கு குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலையை பொறுத்தவரை கிராமிற்கு 30 காசு விலை குறைந்து 40 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது. இதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 17 காசு அதிகரித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close