[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

பான் காடு அவசியம் என்ற கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு: நகை விற்பனையாளர்கள் போராட்டம்

pan-card-issue

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை விற்பனையாளர்கள், பொற்கொல்லர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை கீழராஜவீதியில் தங்க நகை மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொற்கொல்லர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2 லட்சம் ரூபாய்கு மேல் நகை வாங்குவோருக்கு பான் காடு அவசியம் என, மத்திய அரசு அறிவித்திருப்பது நகை விற்பனையை பாதிக்கும் என நகை உரிமையாளர்கள்‌ கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

நாமக்கல் கடைவீதி நகை வியாபாரிகள் சங்க அலுவலகம் எதிரே நகை கடை உரிமையாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் பெரியகடைவீதி, சின்னகடைவீதி, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள நகை வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலும் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கையில் போராட்டம் நடத்தினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close