[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடெங்கும் கிரிக்கெட் ஜுரம் : அதிக இஞ்ச் கொண்ட டிவி விற்பனை அமோகம்

tv-sales-is-increases-in-india-due-to-cricket-fever-across-the-country

உலகக் கோப்பை கிரிக்கெட் ஜுரம் நாட்டையே ஆட்டுவித்து வரும் நிலையில் பெரிய திரை கொண்ட டிவிக்களின் விற்பனை 100% அதிகரித்துள்ளது.

புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போதுதான் அதிரடி தள்ளுபடி,விலைக்குறைப்பு என்றெல்லாம் அறிவிப்பார்கள். ஆனால் பெரிய திரை கொண்ட டிவிக்களுக்கு இப்போது அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளனர் சில்லறை விற்பனையாளர்கள். அதற்குக் காரணம் உலகக் கோப்பை கிரிக்கெட் ஜுரம் தான்.  உலகக் கோப்பை கிரிக்கெட் ஜுரம் நாட்டையே ஆட்டுவித்து வரும் நிலையில் பெரிய திரை கொண்ட டிவிக்களின் விற்பனை 100% அதிகரித்துள்ளது. சோனி, சாம்சங், எல்ஜி, பானசோனிக் போன்ற முன்னணி டிவி உற்பத்தி நிறுவனங்கள் இத்தகவலை தெரிவித்துள்ளன. 

Image result for tv showroom

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் கொச்சி, ராஞ்சி, நாக்பூர் போன்ற 2ம் நிலை நகரங்களிலும் 55 அங்குலத்திற்கும் அதிகமான பெரிய திரை டிவிக்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்தாண்டு இதே மாதத்தில் நடந்த விற்பனையை காட்டிலும் தற்போதைய விற்பனை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related image

உலகக் கோப்பையில் முதல் சுற்று போட்டிகள் முடிந்தவுடன் டிவி விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் பெரிய திரை டிவிக்கள் விலை 50 ஆயிரம் ரூபாய் முதல் 1.75 லட்சம் ரூபாய் வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close